• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்காவில் ஹார்வி புயலுக்குப் பிறகு கரை ஒதுங்கிய அரிய வகை உயிரினம்

September 15, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் ஹார்வே புயலுக்கு பிறகு, டெக்ஸ்சாஸ் கடற்கரையில் அரிய வகை உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

அட்லாண்டிக் கடலில் உருவாகிய ஹார்வே புயல் அமெரிக்காவை கடுமையாக தாக்கியது.இந்த புயல் ஓய்ந்த பிறகு, டெக்ஸ்சாஸ் கடற்கரையில் அரிய வகை உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

புயல் சேதங்களை ஆய்வு செய்து வரும் ப்ரீத்தி தேசாய் என்பவர், இந்த உயிரினத்தை புகைப்படம் எடுத்து,இது எந்த வகை உயிரனம் என்று யாராலும் சொல்ல முடியுமா? என்று சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதுக்குறித்து அமெரிக்காவின் “Department of Vertebrate Zoology, Division of Amphibians and Reptiles” துறையைச் சேர்ந்த டாக்டர் கென்னத் டிக்கே என்பவர் உதவ முன் வந்துள்ளார்.

“டெக்சாஸ் கடற்கரையில் கரையில் ஒதுங்கியது,‘அனோப்ளோகாஸ்றிடே’(Anoplogastridae) என்னும் மீன் குடும்பத்தை சேர்ந்த மீன் ஆகும்.பொதுவாக இந்த வகையான மீன் கடலின் ஆழமான பகுதிகளில் தான் வசிக்கும்.இந்த மீன்கள் அவ்வப்போது டெக்சாஸ் கடற்கரையில் காணப்படும்.

இந்த மீன் சுமார் 33 அடி வரை நீளமுடையது.இந்த மீன்கள் பெரும்பாலும் நண்டுகள்,மற்றும் இறால்,ஆகியவற்றை உண்டு உயிர் வாழும். மேற்கு அட்லாண்டிக் கடலில் சுமார் 108 முதல் 3௦௦ அடி ஆழத்தில் இந்த மீன் இனம் வாழ்ந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க