September 14, 2017
தண்டோரா குழு
நடிகர் விஷாலின் துப்பறிவாளன் திரைப்படம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால், பிரசன்னா நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் துப்பறிவாளன்.
இப்படம் இணையதளத்தில் வெளியாக கூடாது என விஷால் ரசிகர்கள் பறக்கும் படையாக செய்யபட்டனர். எனினும், துப்பறிவாளன் படம் இன்று சட்டவிரோதமாக திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது.
இணையத்தில் படத்தை வெளியிடும் கவுரிசங்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும் படம் தற்போது திருட்டுத்தனமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.