September 14, 2017
தண்டோரா குழு
பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கடந்த மாதம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துத் தனித்தனியே கடிதம் கொடுத்தனர்.
ஆளுநரின் நடவடிக்கைக்காக காத்திருந்த டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள், ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். மேலும், தமிழக அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.