September 14, 2017
தண்டோரா குழு
சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த டி.எஸ்.பி., காதர் பாட்ஷாவை காவல்துறையினர் கும்பகோணத்தில் கைது செய்தனர்.
விருதுநகர் ஆரோக்கியராஜ் என்பவரிடம் இருந்து கைபற்றபட்ட இரண்டு பஞ்சலோக சிலைகளை பல லட்சம் ரூபாய்க்கு டி.எஸ்.பி காதர் பாட்ஷா கடத்தல்காரர்களிடம் விற்று விட்டதாக புகார் எழுந்தது.
இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறி சுப்புராஜ் என்ற காவலரும் கைது செய்யப்பட்டார். இதனிடையே டி.எஸ்.பி காதர் பாட்ஷா தலைமறைவானார்.
இந்நிலையில் சிலைகடத்தல் பிரிவு உயர் அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு தனிப்படை காவலர்கள் கும்பகோணத்தில் தலைமறைவாக இருந்த காதர் பாட்ஷாவை கைது செய்தனர்.