• Download mobile app
15 Sep 2026, TuesdayEdition - 3870
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேழ்வரகு காலிஃபிளவர் மசால் தோசை

September 14, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு – இரண்டு கப்

உளுந்து – ஒரு கப்

அரிசி மாவு – ஒரு கப்

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)

தக்காளி – இரண்டு (நறுக்கியது)

காலிஃபிளவர் – அரை கப்

கொத்தமல்லி – சிறிதளவு

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

மிளகு தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

செய்முறை:

உளுந்தை நாளு மணிநேரம் ஊற வைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.முதல் நாள் இரவே கேழ்வரகு மாவு, அரிசி மாவு, அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறி காய் வேகும்வரை சிம்மில் வைத்து வெந்தவுடன் கொத்தமல்லி துவி இறக்கவும்.

தவாவில் மாவை ஊற்றி வேகவிடவும் வெந்ததும் நடுவில் காலிஃபிளவர் மசாலாவை வைத்து இரண்டாக மடித்து எடுக்கவும்.

மேலும் படிக்க