• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நம்பிக்கை வாக்கெடுப்பு – திமுக மனு நாளை விசாரணை

September 13, 2017 தண்டோரா குழு

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரும் ஸ்டாலின் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை நடக்கவுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை ஆதரவளித்து வந்த டிடிவி.தினகரன் ஆதரவாளர்களான 21 எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆகஸ்ட் 22ம் தேதி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

திமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசு 113 எம்எல்ஏக்களுடன் மைனாரிட்டி அரசாக மாறிவிட்டது ஆகையால் சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தமிழக பொறுப்பு ஆளுநரிடம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் அளித்தார்.

எனினும், பல முறை மனு அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இம்மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க