• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகனின் பிறந்த நாளுக்காக உலகின் மிக பெரிய கேக் தயாரித்த தந்தை

September 13, 2017 தண்டோரா குழு

லண்டனைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய 3 வயது மகனின் பிறந்த நாளுக்காக 3௦௦ கிலோ எடையுடைய ஸ்பாஞ் கேக்கை(Sponge Cake) தயாரித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் லண்டனைச் சேர்ந்த ஸ்டீபன் ஆக்ஸ்போர்டு என்பவர்,ஆக்ஸ்போர்டு பேக்கரியில் பணியாற்றி வருகிறார்.இவர் தனது மூன்று வயது மகன் சாமுவேலின் பிறந்த நாளுக்கு, ஆக்ஸ்போர்டு பேக்கரி ஊழியர்கள் உதவியுடன் 3௦௦ கிராம் எடையுடைய ஸ்பாஞ் கேக்கை(Sponge Cake) தயாரித்துள்ளார்.

லண்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஸ்டுமினிஸ்டர் நியுட்டன் ஆண்டு விழாவில்,இந்த கேக்கை மக்களிடம் காண்பித்தார். இந்த விழாவிற்கு வந்திருந்த மக்களின் முன்னிலையில், தனது மகன் சாமுவேலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்.

ஸ்டீபன் உருவாக்கிய இந்த கேக் சுமார் 5 அடி நீளமும், 8.5 அடி உயரம் இருந்தது. இந்த கேக்கை தயாரிக்க ஒரு நாள் முழுவதும் ஆனதாக கூறினார்.

மேலும் இந்த கேக் உலகின் மிக பெரிய கேக் என்ற சாதனையை படைத்துள்ளது.இதை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ஏற்றுக்கொள்ள அந்நிறுவன அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளதாக, ஸ்டீபன் தெரிவித்தார்.

மேலும் படிக்க