• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிஷின் 24 திட்டத்தை தொடங்கி வைத்தார் சச்சின் டெண்டுல்கர்

September 13, 2017 தண்டோரா குழு

மும்பையில் மிஷின் 24 என்னும் புதிய திட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று(செப் 13)தொடங்கி வைத்தார்.

மும்பையின் “Brihanmumbai municipal Corporation” நிறுவனம், இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவங்களுடன் இணைந்து மிஷன் 24 என்னும் புதிய திட்டத்தை உருவாக்கினர்.

இத்திட்டத்தின் கீழ், மும்பையில் உள்ள சிவாஜி நகர், தியோனர் மற்றும் மான்கர்த் பகுதியைச் சேர்ந்த சேரி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.மேலும்,பள்ளிகள், கல்லூரிகள், மகப்பேறு மருத்துவமனை, சுகாதார மையங்கள், மருந்தகங்கள் ஆகியவையை ஏற்படுத்தி தருவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

இதுக்குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில்,

“மும்பையிலுள்ள சேரி பகுதிகள் வளர்ச்சி அடையாமல், மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. தற்போது புதிதாக தொடங்கியிருக்கும் மிஷன் 24 திட்டம் மூலம் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க