• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டொமினோஸ் பிட்சா மசாலா பேக்கில் பூச்சிகள்!

September 12, 2017 தண்டோரா குழு

புதுதில்லியின் டொமினோஸ் பிட்சா உணவகத்தில் பிட்சாவுடன் தரப்படும் மசாலா பேக்கில் பூச்சிகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுதில்லியை சேர்ந்த ராகுல் அரோரா என்பவர் டொமினோஸ் பிட்சா உணவகத்திலிருந்து ஆன்லைன் மூலம் பிட்சா ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்கு பிறகு, அவர் ஆர்டர் செய்த பிட்சா அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பிட்சாவோடு தரப்படும் மசாலா பேக்கில் பூச்சிகள் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இன்னிலையில், தான் பார்த்தது பிட்சாவை மசாலா மூலிகைகளாக இருக்கலாம் என்று நினைத்தார். அந்த மசாலா பேக்கை தட்டிய போது, அதிலிருந்து பூச்சிகள் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் புதுதில்லியிருந்த நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கு தகவல் தந்தார்.

இதனையடுத்து தகவல் அறிந்த அவர்கள் ராகுலின் வீட்டிற்கு வந்து, பூச்சிகள் இருந்த பேக்கை சோதனைக்கு எடுத்து சென்றனர்.

இதன் பிறகு, ராகுலிடம் டொமினோஸ் பிட்சா உணவகத்தின் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர்.இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று டொமினோஸ் பிட்சா உணவக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

மேலும் படிக்க