September 12, 2017
தண்டோரா குழு
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்திருந்தனர். இதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறி தினகரன் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் சந்தித்த நிலையில் திமுக சார்பில் தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ஆளுநரிடம் இதுதொடர்பாக மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.