• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது !

September 12, 2017 தண்டோரா குழு

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (செப் 12) நடைப்பெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்றும்,இனி பொதுச்செயலாளர் பொறுப்பே கிடையாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் எப்போதும் நிரந்தர பொதுச் செயலாளர் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும்,அ.தி.மு.க.வின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமனத்துக்கும் பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அ.தி.மு.க.வில் இனி ஒருவரை சேர்க்கவும், நீக்கவும் பன்னீர்செல்வம், மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

மேலும் படிக்க