September 12, 2017
தண்டோரா குழு
கொலம்பியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரோமன் கத்தோலிக்க தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ்,காயத்துடன் நாடு திரும்பினார்.
ரோமன் கத்தோலிக்க தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ், கொலம்பியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அவர் தனது வாகனத்தில் ஏறும்போது ஏற்பட்ட தடுமாற்றத்தால் வாகனத்தில் மோதி காயம் அடைந்துள்ளார்.
இதனால் அவருடைய கன்னம், கண்கள் மற்றும் புருவம் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்ட காயங்களிலிருந்து வடிந்த ரத்தம், அவர் அணிந்திருந்த வெள்ளை உடையில் விழுந்தது.அதை கண்ட அவருடைய ஊழியர்கள் அவருக்கு உடனே ஐஸ் கட்டி வைத்து முதல் உதவி தந்தனர்.
பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு, அந்நாட்டின் கடலோர பகுதியில் திரண்டிருந்த சுமார் 5௦௦,௦௦௦ மக்களுடன் உரையாடினார். அதற்கு பின்னர், அவர் ரோம் திரும்பி சென்றார். அவரை கொலம்பிய நாட்டின் மக்கள் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.