• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வரை மாற்றவில்லை என்றால் இந்த ஆட்சியை கிள்ளி எறிவோம்! – டிடிவி தினகரன்

September 11, 2017 தண்டோரா குழு

முதல்வரை மாற்றவில்லை என்றால் இந்த ஆட்சியை கிள்ளி எறிவோம் என அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.அதிமுக துணைப் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

துரோகம், சுயநல சிந்தனை உடையவர்கள் மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முதல்வரை மாற்ற முயற்சிக்கிறோம். முடியவில்லை என்றால், இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவும் தயாராகிவிட்டோம். இது அம்மாவின் ஆட்சியல்ல.

எடப்பாடி பழனிச்சாமி – ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் துரோக ஆட்சி. இந்த ஆட்சி நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல.சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஏட்டாக டி புரமோட் ஆனது போல, மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் துணை முதல்வராகிவிட்டார். பதவி இல்லையென்றால், ஓபிஎஸ்க்கு தூக்கம் வராது.முதல்வரை மாற்றவில்லை என்றால் இந்த ஆட்சியை கிள்ளி எறிவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க