September 11, 2017
தண்டோரா குழு
மழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை இடையே மரம் விழுந்து போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்தது. இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் அவதிக்குள்ளாகினர்.
கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக மரம் சாலையின் நடுவே விழுந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் சுமார் 30 க்கும் மேற்ப்பட்ட பணியாட்களை கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.
மேலும், குன்னூரிலிருந்து தற்போது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், இன்று மாலைக்குள் முழு அளவிலான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.