September 9, 2017
தண்டோரா குழு
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீடு அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஜெயந்தி நடராஜன்காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தார். 2013-ம் ஆண்டு திடீரென அமைச்சர் பதவியிலிருந்து விலகிய ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீதும் கடும் குற்றச்சாட்டுகளைக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அவர், எந்த அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், சுற்றுச்சூழல் அனுமதிக்காக லஞ்சம் வாங்குவதாக ஜெயந்தி நடராஜன் மீது புகார் வந்ததையடுத்து ஜெயந்தி நடராஜனின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.வீட்டில் இருந்தவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
சி.பி.ஐ-யின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.