• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் நாளை நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து – தினகரன் அறிவிப்பு

September 8, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் நாளை நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக நாளை சென்னையில் டிடிவி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் எந்த ஒரு போராட்டமும் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதையடுத்து, நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் நாளை நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நீட் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.இருப்பினும், நீதிமன்ற தீர்ப்பை மதித்து கழகத்தின் சார்பில் நாளை நடைபெற இருந்த நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க