• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிராக எந்த ஒரு போராட்டத்திற்கும் அனுமதிக்க முடியாது-உச்ச நீதிமன்றம்

September 8, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிராக எந்த ஒரு போராட்டத்திற்கும் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாணவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர் உச்ச நீதிமன்றம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், அனிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். அனிதா மரணத்துக்காக நடைபெறும் போராட்டங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட்டிற்கு எதிராக போராடுவது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. வகுப்புகளை புறக்கணித்து கடையடைப்பு , சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்தக்கூடாது. எனவே, தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு பிரச்னைகளை கையாள வேண்டும். போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், தமிழக தலைமை செயலாளர், முதன்மை செயலாளர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு விசாரணை வருகின்ற 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க