• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணசாமி வீட்டை முற்றுகையிட்ட வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவினர் கைது

September 8, 2017 தண்டோரா குழு

அனிதாவையும் சமூக நீதிக்காக போராடுபவர்களையும் இழிவு படுத்தும் வகையில் பேசிவரும் டாக்டர் கிருஷ்ணசாமியின் வீட்டை வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியினர் முற்றுகையிட்டனர்.

தன் மருத்துவக்கனவு நீட் தேர்வினால் கலைந்து போனதால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.அவரது மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடித்தி வருகின்றனர்.

இதற்கிடையில்,சமூக நீதியின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவராகி தற்போது பாஜகவிடம் விலைப் போன புதிய தமிழகம் கட்சித்தலைவர் Dr.கிருஷ்ணசாமி, மாணவி அனிதாவையும் சமூக நீதிக்காக போராடுபவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார் என்றும் வலுக்கட்டயமாக நீட் தேர்வை புகுத்தும் மத்திய அரசையும் வேடிக்கை பார்த்த எடப்பாடி அரசையும் கண்டித்தும், அனிதாவை இழிவுபடுத்திய Dr. கிருஷ்ணசாமியை மன்னிப்பு கேட்க கோரியும் கோவை மாவட்ட வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியினர் டாக்டர் கிருஷ்ணசாமி வீட்டை முற்றுகையிட்டனர்.

அப்போது, முற்றுக்கை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவரான கிருஷ்ணசாமியும், மருத்துவம் படிக்க தகுதி இல்லாமல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிபாரிசு மூலம் மருத்துவரான அவரது மகளும் தங்களது மருத்துவப்பட்டத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப்பணிகளை தொடரட்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இப்போராட்டத்திற்கு வெல்ஃபேர் பார்ட்டி மாநில பொதுச்செயலாளர் A.முகம்மது காசிம் தலைமை தாங்கினார்.FITUமாநிலத் தலைவர் கோவை இப்ராஹீம்,வெல்ஃபேர் பார்ட்டி மாவட்டத்தலைவர் EMS, துணைத் தலைவர் S.M.ஷாஜஹான், பொருளாளர் H.முஜீப்,SIO மாவட்டத் தலைவர் A. ஷப்பீர்,வெல்ஃபேர் பார்ட்டி இணைச் செயலாளர் R.பீர் முகம்மது, துணைச்செயலாளர் ஆஷிக், பொள்ளாச்சி மணிமாறன், மதி அம்பேத்கர், தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ சங்கத்தலைவர் மோகன்ராஜ்,செயலாளர் ஹம்சா,மற்றும் பெண்கள் அணியினர்,செயல்வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில்,கிருஷ்ணசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்ற அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.

மேலும் படிக்க