• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சோமனூரில் பேருந்து நிலையம் இடிந்து விழுந்தது

September 7, 2017 தண்டோராகுழு

கோவை மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலைய கட்டடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. ஐந்து பேர் வரை இறந்திருக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் சோமனூரில் உள்ள பேருந்து நிலையம் வளாகம் மற்றும் அதில் இருந்த கடைகளும் தீடிரென இடிந்து விழுந்தன.இந்த கோர சம்பவத்தில் பேருந்துகளுக்காக காத்திருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பத்துக்கும் மேற்ப்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த கருமத்தம்பட்டி போலீசார்,தீயணைப்புத்துறையினர் பொக்லின் மற்றும் கிரேன் இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளை அப்புறப்படுத்தி சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் திருப்பூர்,கோவை,பல்லடம் பகுதிகளிலிருந்து பத்துக்கும் மேற்ப்பட்ட ஆம்புலன்சுகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.இந்த திடீர் விபத்தில் ஐந்து பேர் வரை இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.மீட்பு நடவடிக்கைக்குப் பின்னரே முழு விபரங்கள் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க