September 6, 2017 
தண்டோரா குழு
                                நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த இயலாது என வேலூர் சிஎம்சி எனப்படும் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மருத்துவப்படிப்பு சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வு நடத்தி அதன் மூலம் மருத்துவ சேர்க்கை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி நீட் தேர்வும் நடைபெற்று மதிப்பெண்னும் வெளியிடப்பட்ட்டது.
இந்நிலையில்நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த இயலாது என வேலூர் சிஎம்சி எனப்படும் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.   
இது தொடர்பாக சிஎம்சி நிர்வாகம் தெரிவிக்கையில், 
தங்களது மருத்துவக்கல்லூரியில் பயிலும் சிறுபான்மை மாணவர்கள், ஏழை எளிய மக்களுக்காக செயல்படும் மருத்துவமனைகளில் 2 ஆண்டுகளுக்கு பணியாற்றுவது கட்டாயம் என்ற விதி இருக்கிறது.ஆனால் தற்போதைய மாணவர் சேர்க்கை முறைப்படி அத்தகைய மாணவர்களை தேர்வு செய்ய இயலாது. குறிப்பாக மாணவர்களுக்கு சேவை மனப்பான்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்த பின்னரே அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். இதனால் வெறும் நீட் மதிப்பெண் முறையில் அத்தகைய மாணவர்களை கண்டறிவது சாத்தியமல்ல.
இதனால் பி.பி.எஸ் படிப்பில் உள்ள 99 இடங்கள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிலுள்ள 61 இடங்களுக்கு நடப்பாண்டு மருத்துவ சேர்க்கை நிறத்தி  நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக சிஎம்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.எனினும், மத்திய அரசு பரிந்துரையின் கீழ், வீர மரணம் அடைந்த வீரர் ஒருவரது மகனுக்கு மட்டும் எம்பிபிஎஸ் வகுப்புகள் நடத்தப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் அடுத்த மாதம் விசாரணை நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2018-இல் நூற்றாண்டு விழா கொண்டாட உள்ள வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் 85 இடங்களில் சிறுபான்மைப் பிரிவு மாணவர்களும் மீதமுள்ள 15 இடங்களில் பிற பிரிவு மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.