September 6, 2017 
தண்டோரா குழு
                                நீட் பற்றி நீட்டி முழக்காதீர் கூடி யோசிப்போம் என நடிகர் கமல்ஹாசன்  கூறியுள்ளார்.நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசியல் சூழல் குறித்தும்  தமிழக அரசு மீதும் பல்வேறு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வருகிறார். 
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறித்தி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது:
நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர். இது விடைகாணும் வேளைஇது சந்ததியின் எதிர்காலம் கூடி யோசிப்போம். வெகுளாதீர் மதி நீதியையும் வெல்லும். இவ்வாறு நடிகர் கமல் டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.