• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அறிமுகமாகும் புதிய கான்ஃபெடரேட் மோட்டார் சைக்கிள்

September 5, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் கான்ஃபெடரேட் மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த கான்ஃபெடரேட் மோட்டார் சைக்கிள் நிறுவனம் சுற்றுசூழலுக்கு ஏதுவான புதிய கர்டிஸ் மோட்டார் சைக்கிளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக ஜீரோ மோட்டார் சைக்கிள் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளது.

மோட்டார் சைக்கிளில் கலை வண்ணத்தோடும் விலைமதிப்பற்ற மோட்டார் சைக்கிளை தயாரிக்கும் முன்னிலை நிறுவனம் கான்ஃபெடரேட் ஆகும். X132 Hell Cat மற்றும் P51 Fighter ஆகிய மோட்டார் சைக்கிள் வகைகளை உருவாக்கியது.பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான மஹேந்திர சிங் தோனி, மிகவும் அரிதான ஹெல்கேட் மாடல் மோட்டார் சைக்கிளை வைத்துள்ளார்.

இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் தயாரிக்கப்படுகிறது. தற்போது தயாரிக்கப்படவுள்ள கர்டிஸ் மோட்டார் சைக்கிளுக்கு ‘ஹெர்குலிஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அந்த மோட்டார் சைக்கிளின் விலை இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அது நிச்சயம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்க