• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அணு ஆயுத ஏவுகணை சோதனை குறித்து விவாதிக்க ஐநா சபை கூடுகிறது

September 4, 2017 தண்டோரா குழு

வட கொரியாவின் தொடர் அணு ஆயுத ஏவுகணை சோதனை குறித்து சர்வதேச நாடுகள் தந்துள்ள புகாரையடுத்து ஐநா சபை அவசரமாக இன்று(செப்டெம்பர் 4) கூடுகிறது.

வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்து வருகிறது. அதற்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், வட கொரியா தொடர்ந்து சோதனையை நடத்தி வந்ததையடுத்து, ஐநா சபைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வட கொரியா நடத்தி வந்த சோதனைக்கு ஐநா கண்டனம் தெரிவித்தது. இருப்பினும், அந்த நாடு தொடர்ந்து ஏவுகணை சோதனையை கைவிடவில்லை.

இந்நிலையில், நீண்ட தூர ஏவுகணைக்காக வடிவமைக்கப்பட்ட ஹைட்ரஜன் குண்டு ஏவுகணையை வட கொரியா ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்து அந்த சோதனையின் முடிவில் வெற்றியும் கிடைத்தது.

மேலும் வட கொரியா நடத்தும் அணு ஆயுத சோதனை மிகவும் ஆபத்தானது. அதனால், இந்த சோதனையை வட கொரியா நிறுத்தவேண்டும் என்று ஐநாவின் செயலாளர் ஜெனெரல் அந்தோனியோ கெடரெஸ் வலியுறித்தினார்.

மேலும் படிக்க