September 4, 2017 
                                நடிகர் கமல்ஹாசனை அவரது இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், நடிகையுமான நக்மா இன்று சந்தித்து பேசினார்.
நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாகவே தமிழக அரசுக்கு எதிராக  குரல் கொடுத்து கொடுத்ததும் அரசியல் குறித்தும் பேசிவருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், நடிகையுமான நக்மா கமல்ஹாசனை அவரது இல்லத்தில் இன்று திடீரென சந்தித்து பேசினார்.
சென்னைக்கு அவ்வப்போது வரும் நடிகை நக்மா முக்கிய சினிமாவின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருவது வழக்கம் தான். சென்ற முறை வந்த போது அவர்  நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அவ்வாறு இன்று சென்னைக்கு வந்த நடிகை நக்மா கமல்ஹாசனை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நக்மாவுடனான கமல் சந்திப்பு என்பது மரியாதை நிமர்த்தமான சந்திப்பா அல்லது அரசியல் ரீதியிலானதா சந்திப்பா என்பது போக போக தான் தெரியும்.