• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி மையம் தொடங்கப்படும் – தமிழக அரசு

September 2, 2017 தண்டோரா குழு

பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் பயிற்சி மையம் சென்னையில் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதுக் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில், மத்திய மாநில அரசுத்துறைகள் மற்றும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் அரசின் சார்பில் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த பயிற்சி மையத்தை பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வட சென்னையில் இந்த ஆண்டு தொடங்க என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு 1 கோடியே 53 லட்சம் ரூபாயும், அதன் பின்னர் ஆண்டுதோறும் 1 கோடியே 25 லட்சம் ரூபாயும் செலவு ஏற்படும்.இப்பயிற்சி மையத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளை, திறமையாக எதிர்கொண்டு அவற்றில் தேர்ச்சி பெறும் வகையில், முறையான பயிற்சி அளிக்கப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க