• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனிதாவின் மரணத்தை தொடர்ந்து அரியலூரில் கடையடைப்பு

September 2, 2017 தண்டோரா குழு

அனிதாவின் மரணத்தையொட்டி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கடையடைப்பு நடைபெற்று வருகிறது .

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா நேற்று(செப் 1) தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்திற்கு மட்டும் நீட்டிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கூறியதும் தமிழகத்தில் பல மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைத்துவிட்டது.

இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து சட்ட ரீதியாக போராடிய மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர்,மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டிக்கும் வகையிலும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம் நடக்கிறது.தமிழகம் முழுவதும் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க