September 1, 2017 
தண்டோரா குழு
                                அனிதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் பாண்டிராஜ் வேதனையாக பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில், இவருடைய தற்கொலை குறித்து இயக்குநர் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையாக  ஒரு டுவிட் செய்துள்ளார். 
அதில், Rip போடுற வயசா இது?. வேதனைப்பட வேண்டிய விஷயம் இல்லை. வெட்கப்பட வேண்டிய விஷயம். எப்போது கல்வி வியாபாரம் ஆச்சோ அப்பவே அரசும் செத்து போச்சு இவ்வாறு இயக்குநர் பாண்டிராஜ் அவர் கூறியுள்ளார்.