September 1, 2017 
தண்டோரா குழு
                                வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என  போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், அசல் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் மோட்டார் வாகன சட்டப் பிரிவு 139-ன் படி ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும் போது, தங்களுடைய அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.