• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – டிடிவி தினகரன்

September 1, 2017 தண்டோரா குழு

எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நபா்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.டி.வி.தினகரன் தொிவித்துள்ளாா்.

அதிமுகவில் இ.பி.எஸ் அணியினரும், ஓ.பி.எஸ் அணியினரும் இணைந்ததை தொடா்ந்து டி.டி.வி.தினகரன் தலைமையில் 19 சட்டமன்ற உறுப்பினா்கள் தனி அணியாக பிாிந்தனா்.

மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அந்த கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, இது கட்சி சம்பந்தப்பட்ட வி‌ஷயம் என்று கூறி மறுத்து விட்டார்.

இந்நிலையில் அ.தி.மு.க.வில் வருகிற 12-ந்தேதி அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டப்போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடா்பாக இன்று காலை டிடிவி தினகரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளாா். அந்த அறிவிப்பில், எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள பொதுக்குழுவிற்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அ.தி.மு.க.வின் சட்டதிட்டத்தின் அடிப்படையில் பொதுக்குழுவை கூட்டுவதற்கு பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

மேலும்,இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் யாரும் பங்கேற்க கூடாது மீறும் நபா்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.டி.வி.தினகரன் தொிவித்துள்ளாா்.

மேலும் படிக்க