• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரைப்படத்தில் வருவது போல் தம்பியின் உயிரை காப்பாற்றிய அண்ணன்

August 26, 2017 எலிசபெத்

அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் திரைப்படத்தின் காட்சி ஒன்றை நினைவில் கொண்டு, அதேபோல் செய்து, தனது சகோதரனின் உயிரை காப்பற்றியுள்ளான்.

அமெரிக்கைவில் வசிக்கும் 1௦ வயது சிறுவன் ஜேகப் ஓ கானர், தனது 2 வயது சகோதரன் டிலன்னுடன், பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்காக சென்றான். அங்கு ஜேகப் தொலைக்காட்சி பார்த்துகொண்டிருந்தான், அவனுடைய சகோதரன் டிலன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து, வீட்டின் பின்புறத்தின் கதவு திறந்து இருப்பதையும், டிலன் விளையாடிக்கொண்டிருந்த இடத்தில் இல்லாததையும் ஜேகப் கவனித்துள்ளான்.

அவன் வெளியே சென்று பார்த்தபோது, அங்கிருந்த நீச்சல் குளத்தில் டிலன் தலைகீழாக கிடப்பதை பார்த்தான். உடனே அவனை வெளியே கொண்டு வந்தான். சமீபத்தில் அவன் பார்த்த ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில், தண்ணீருக்குள் விழுந்த தனது மகளின் உயிரை காப்பாற்ற, அந்த பெண்ணின் தந்தை, இதய பகுதியில் கைகளை வைத்து, மூச்சு விடும் வரை அழுத்துவார். அந்த காட்சியில் நடந்ததை அப்படியே டிலனுக்கு செய்தான். சிறிது நேரத்தில் டிலன் கண் விழித்தான்.

டிலனை அழைத்துக்கொண்டு, தனது பாட்டியிடம் நடந்ததை கூறினான். உடனே அவர் டிலனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

சிறுவன் ஜேகப் செய்த சரியான செயலால், டிலன் உயிர் பிழைத்தான். சிறிது நேரம் தாமதம் ஆகியிருந்தால், நிச்சயன் டிலனின் உயிரை காப்பாற்றியிருக்க முடியாது என்று டிலனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க