• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனக்குப் பொறாமை குணமும் இல்லை: ‘பென்சில்’ சுஜா வருணி

June 3, 2016 தண்டோரா குழு

பென்சில் படம், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அறிமுகப்படமாக வெளிவரவேண்டிய படம் நீண்ட தயாரிப்புக்குப் பின் தற்போது வெளியாகியுள்ளது. பென்சில் படத்தில் ஆசிரியர் வேடத்தில் வந்து தன்னை வில்லன் மாணவன் மிரட்டும்போதும், சக ஆசிரியருடன் காதல் மொழி பேசும்போதும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் சுஜா வருணி. இவர் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க நல்ல வாய்ப்புக்காகப் பொறுமையாக காத்திருக்கிறார்.

இது குறித்து கூறிய சுஜா வருணி, நடிப்புத் தொழிலில் நான் இப்போது நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகிறேன். எனக்கு எந்த ஒரு பிரச்சினையை மனதில் போட்டுக்கொண்டு புலம்பும் இயல்பு கிடையாது. அதே போல கிடைக்காத ஒன்றிற்காக ஆதங்கபாடுவதும் கிடையாது. மற்றவர் வளர்ச்சியைப் பார்த்து எனக்குப் பொறாமைப்படும் குணமும் கிடையாது. என் குறி அனைத்தும் தமிழக திரைத்துறையில் நீங்காத ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க