• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூடானில், நீச்சல் குளத்தில் ரஷ்ய தூதர் சடலமாக மீட்பு

August 24, 2017 தண்டோரா குழு

சூடான் நாட்டுக்கான ரஷ்ய தூதர் சூடானில் உள்ள தனது இல்லத்தின் நீச்சல் குளத்தில் இறந்துகிடந்துள்ளார்.இச்சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூடான் நாட்டிற்கான ரஷ்ய தூதர் மிர்கயாஸ் ஷிரின்ஸ்கி, அந்நாட்டின் தலைநகரமான கார்டோம் நகரிலுள்ள வீட்டின் நீச்சல் குளத்தில் புதன்கிழமை(ஆகஸ்ட் 23)அன்று இறந்து கிடந்தார். “அவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்று சரியாக தெரியவில்லை. ஒரு வேலை அவருக்கு இருந்த உயர் இரத்த அழுத்தம் காரணமாக, இயற்கையாக இறந்திருக்க கூடும்,” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூடான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர், அவருடைய திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய உடலை ரஷ்யாவிற்கு எடுத்து சென்று, முறைபடி அங்கு உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க