• Download mobile app
18 Mar 2026, WednesdayEdition - 3689
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை முதல் புதிய ரூ. 200 நோட்டுக்கள் ரிசர்வ் வங்கி

August 24, 2017 தண்டோரா குழு

புதிய ரூ. 200 நோட்டு நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து, புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.

அப்போது 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் குறைவான புழக்கத்தில் இருந்ததால் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதில் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாயினர்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடுவதற்கு மத்திய அரசிடம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை நேற்று வெளியிட்டது.

இதனையடுத்து புதிய 200 ரூபாய் நோட்டு மாதிரிகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது. நாளை முதல் இந்த புதிய ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வருகிறது.

மேலும் படிக்க