• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீச்சல் குளத்தில் போராடிய பெண்ணை மீட்ட பேஸ்புக் நண்பர்கள்

August 21, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில், நீச்சல் குளத்தில் சுமார் 3 மணிநேரம் சிக்கிய பெண்ணை அவருடைய பேஸ்புக் நண்பர்கள் காப்பாற்றியுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த 61 வயது மூதாட்டி லெஸ்லி கான், தன்னுடைய வீட்டின் பின்புறத்திலிருந்த நீச்சல் குளத்தில் நீந்துவது வழக்கம். அதேபோல், சில தினங்களுக்கு முன், அவர் அந்த குளத்தில் இறங்கி நீந்தினார். அதிலிருந்து வெளியே வர பயன்படுத்தப்படும் ஏணியில் ஏறிய போது, அந்த ஏணி எதிர்பாராதவிதமாக உடைந்துவிட்டது.

அதனால், அவரால் நீச்சல் குளத்திலிருந்து வெளியே வர முடியவில்லை. சுமார் 3 மணிநேரம், அங்கேயே சிக்கினார்.அங்கிருந்து வெளியே வர போராடியும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரை சுற்றி யாருமில்லாததால், அவருடைய நிலை யாருக்கும் தெரியவில்லை.

உடனே, நீச்சல் குளத்தின் கரையிலிருந்த அவருடைய ஐபேட் மூலம், பேஸ்புக் பகுதியில் ‘அவசர உதவி தேவை’ என்று பதிவிட்டார். அவருடைய பதிவைக் கண்ட அவருடைய நண்பர் ஒருவர், காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

உடனே அவர்கள், அவருடைய வீட்டை அடைந்து, அவரை நீச்சல் குளத்திலிருந்து மீட்டனர். மீட்கப்பட்ட அவர், தனக்கு உரிய நேரத்தில் உதவி வந்தது என்று தனது பேஸ்புக்கிலுள்ள சுமார் 3,981 பேருக்கு தகவல் கொடுத்தார்.

“நீங்கள் வாழ்கையில் போராட்டங்களை சந்திக்கும்போது, மற்றவரிடம் உதவி கேட்கிறீர்கள். அதேபோல், மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆயத்தமாக இருங்கள்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க