• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலா உலா வரும் 2 வது வீடியோ வெளியானது

August 21, 2017 தண்டோரா குழு

பெங்களூரு சிறையில் சசிகலாவும், இளவரசியும் சாதாரண உடையில் வலம் வரும் புதிய வீடியோ ஆதாரத்தை சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா வெளியிட்டுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். அதன் பின்னர் அவர்கள இருவரும் சிறையில் சாதரணமாக உலாவுவது போல் வீடியோவும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரூபா,லஞ்ச ஒழிப்பு துறையிடம் புதிய வீடியோ ஆதாரம் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் சசிகலாவும், இளவரசியும் கலர் உடையில் சிறையின் நுழைவாயில் வழியாக சிறைக்குள் வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் ஆண் நடமாடுவதும் இடம்பெற்றுள்ளது.

சசிகலா மீதான புகார் தொடர்பாக தொடர்ந்து வீடியோ ஆதாரங்கள் வெளியாகி வருவதாள் சசிகலா தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர் என சசிகலா ஆதரவு வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க