• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேவைப்படும் போது எங்களின் பலத்தை நிருபிப்போம் – டிடிவி தினகரன்

August 18, 2017 தண்டோரா குழு

எங்களின் நிலைப்பாட்டை தற்போது வெளிப்படையாகக் கூற முடியாது. தேவைப்படும்போது எங்களின் பலத்தை நிருபிப்போம் என்று அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று அவர் சந்தித்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அணிகள் இணைவது ஏற்கதக்கது. ஆனால், சிலர் தங்களது பதவியைக் காப்பாற்ற இணைக்க முயல்கின்றனர்.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடந்தால் தான், பல்வேறு தரப்பினர் வைக்கும் புகார்களுக்கு விடை கிடைத்து, சசிகலா குற்றமற்றவர் என்பது வெளிப்படும்.

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு இல்லமாக மாற்றுவது தவறில்லை. ஆனால், அது அவசர கதியில் இல்லாமல் தொண்டர்களின், பொது மக்களின் கோரிக்கை ஏற்ப இருக்க வேண்டும். முதல்வரின் இந்த அறிவிப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை.

சசிகலாவிடம் ஆலோசனை நடத்தியுள்ளேன் கட்சியை காப்பாற்ற நடவடிக்கைகள் இருக்கும். எங்களின் நிலைப்பாட்டை தற்போது வெளிப்படையாக கூற முடியாது. தேவைப்படும்போது எங்களின் பலத்தை நிருபிப்போம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க