• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் உயிரிழந்த தமிழக இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிதியுதவி: கேரள முதலமைச்சர்

August 16, 2017 தண்டோரா குழு

கேரளாவில் சிகிச்சை அளிக்க மறுத்து உயிரிழந்த தமிழக இளைஞர் முருகன் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிதியுதவி கேரள முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, இச்சம்பவத்திற்க்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார். இந்நிலையில் இன்று முருகன் குடும்பத்தை நேரில் சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் முருகன் குடும்பத்தினருக்கு கேரள அரசு ரூ.10 லட்சம் நிதியுதவியாக அளிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க