• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பள்ளி மாணவனுக்கு முதல்வர் எழுதிய கடிதம் !

August 15, 2017 தண்டோரா குழு

நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை சுகுணா பள்ளியைச் சேர்ந்த முதலாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்ரீவந்த் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளான்.அந்த வாழ்த்துக் கடிதத்திற்கு, நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வரும் ஸ்ரீவந்திற்கு நன்றி கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், “இந்திய சுதந்திரத் திருநாளை முன்னிட்டு, எனக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினையும், சுதந்திர தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் வரைந்திருந்த தேசியக் கொடியினையும், தேசிய வரைப்படத்தினையும் கண்டு மகிழ்ச்சியுற்றேன். இந்த இளம் வயதில் உங்களுடைய நாட்டுப்பற்றினைக் கண்டு பெருமையடைந்தேன்.

நீங்கள் கல்வியில் சிறந்த மாணவராகவும், ஒழுக்கத்தில் மேன்மையானவராகவும் திகழ்ந்து, நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்த்திட எனது ஆசிகளையும், வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க