• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எல்.இ.டி. தெரு விளக்குகள் டெண்டருக்கு அனுமதி அளித்தது சென்னை உயர் நீதிமன்றம்

August 12, 2017 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் 9.06 லட்சம் எல்இடி தெரு விளக்குகள் அமைப்பதற்கான டெண்டருக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும் மின்சிக்கனத்துக்காக எல்.இ.டி. பல்புகள் தெருவிளக்குக்குகளாகப் பொருத்தப்படுகிறது. தமிழகத்தில் எல்.இ.டி. பல்புகளை சென்னை மாநகராட்சி ஆய்வகத்தில் தரப்பரிசோதனை செய்ய வேண்டும் என்ற ஒப்பந்த நிபந்தனை உள்ளது.இதனை எதிர்த்து தியாகராய நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அம்மனுவில் சென்னை மாநகராட்சி எலக்ட்ரிக்கல் பிரிவில் போதிய உபகரணங்கள் இல்லை என்றும், ஹரியானாவில் உள்ள தேசிய சோதனை மற்றும் அளவீட்டு பரிசோதனை வாரியமே அதற்கான தகுதியான அமைப்பு என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த நிபந்தனைகள் குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரருக்கு சாதகமாக, உள்நோக்கத்துடன் தமிழக அரசு உருவாக்கியிருப்பதாகத் தெரியவில்லை என்றும் திட்டப்பணி எந்த ஒரு இடையூறும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த நிபந்தனையை அரசு உருவாக்கியுள்ளதாகவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும் படிக்க