• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாருக்கு காயம்! அதிர்ச்சியடைந்த படக்குழு!

August 12, 2017 tamilsamayam.com

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாலிவுட்டில் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி வரும் படம் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான். மேலும், இப்படத்தில், அமீர் கான், கத்ரீனா கைஃப், ஃபாத்திமா சனா ஷேக், சன்ஷங்க் அரோரா, ஜாக்கி ஷரோப் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், ஐரோப்பாவில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். அப்போது படத்தின் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அவருக்கு விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக படப்பிடிப்பை மற்றொரு நாளைக்கு மாற்றியமைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர். அதற்கு நான் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டும். அதனால், படப்படிப்பை தொடரலாம் என்றார். இடையில், அமீர் கானும், அவரை ஓய்வெடுக்கும் படி கூறியிருக்கிறார்.

இதற்கு எனக்கு ஒன்றும் இல்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன் என்று அமிதாப் தெரிவித்துள்ளார். ஆனால், மறுநாள் படக்குழுவினர் அமிதாப்பை பார்க்கும் பொழுது, அவர் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட வலியோடு நடந்து சென்றுள்ளார். இவரைப் பார்த்த அமீர் கானும் கொஞ்ச நேரத்தில் அதிர்ச்சியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க