• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

420 எனதினகரன் கூறுயது டிடிவி தினகரனுக்குத் தான் பொருந்தும் – முதலமைச்சர் பழனிச்சாமி

August 11, 2017 தண்டோரா குழு

420 எனதினகரன் கூறுயது டிடிவி தினகரனுக்குத் தான் பொருந்தும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது.இதில் எடப்பாடி பழனிசாமிக்கும் – தினகரன் தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரனை ஏற்க முடியாது என நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

ஆனால், தீர்மானம் குறித்து நேற்று பேசிய தினகரன், அவர்கள் நிறைவேற்றியுள்ள தீர்மான கடிதத்தில் அதிமுக என்ற பெயரை பயன்படுத்தியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி தற்போது அதிமுக என்ற கட்சி பெயரையும், சின்னமான இரட்டை இலையையும் யாரும் பயன்படுத்த கூடாது. ஆனால் அதனை மீறி எனக்கு எதிரான தீர்மானத்தை அதிமுக லெட்டர் பேடில் வெளியிட்டுள்ளனர். இது சட்டப்படி குற்றமாகும். 420 எனப்படும் மோசடி வேலையை ஒத்த செயலாகும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் டெல்லி சென்றுள்ள முதல்வர் பழனிசாமி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு மோடியிடம் வலியுறுத்தினேன். அணிகள் இணைப்பு குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. விரைவில் இரு அணிகளும் இணையும் என நம்புகிறேன். என் தலைமையிலான ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மீண்டும் கொண்டு வரப்பட்டால் நிச்சயம் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவோம் என்றார்.

மேலும், தினகரன் 420 என கூறியது அவருக்கு தான் முழுவதும் பொருந்தும் ஏனெனில், கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகளை பார்த்தால், 420 என்ற பட்டம் அவருக்கு தான் பொருந்தும் என்றார்.

மேலும் படிக்க