• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை அரசுஉறுதி மொழியை காப்பாற்றவில்லை -மு.க.ஸ்டாலின்

August 9, 2017 தண்டோரா குழு

இலங்கை அரசு இந்திய அரசுக்கு அளித்த எந்த உறுதிமொழியையும் காப்பாற்றவில்லை என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“ஒரே நாளில் 49 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையின் அராஜக நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அராஜகமாக கைது செய்தது மட்டுமின்றி மீனவர்களின் படகுகளை தங்களின் கப்பலை விட்டு மோதி கடலில் மூழ்கடித்திருப்பதும், மற்ற படகுகளை பறிமுதல் செய்திருப்பதும் இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான செயலாக அமைந்திருக்கிறது.

படகுகளை உடைத்து நொறுக்கி நாசப்படுத்துவது ‘நட்பு நாடு’ என்று கூறும் இலங்கை அரசுக்கு அழகல்ல.இந்திய அரசு துவங்கியுள்ள ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டத்திற்கும் ஊறு விளைவிக்கும் செயலாகவே இலங்கை கடற்படையின் இந்த கண்மூடித்தனமான கைதுகள் அமைந்துள்ளன.

இலங்கை சிறையில் இந்திய மீனவர்களை ஒவ்வொரு முறை விடுவிக்கும் போதும், அடுத்து வரும் சில நாட்களில் கொத்துக் கொத்தாக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசின் மோசமான நடவடிக்கை ஒரு தொடர்கதை.

இலங்கை அரசு இந்திய அரசுக்கு அளித்த எந்த உறுதிமொழியையும் காப்பாற்றவில்லை.மீனவர்கள் பிரச்சனை பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் விதத்தில் இந்திய மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் வேதனையளிக்கிறது.

கைது செய்யப்பட்ட 49 மீனவர்களையும் சேர்த்து இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கும் 64 மீனவர்களையும், 125 படகுகளையும் உடனடியாக விடுவிக்க, மத்திய அரசு தூதரக ரீதியிலாக உரிய அழுத்தத்தை, இலங்கை அரசுக்குக் கொடுக்க வேண்டும்.

மீனவர்களின் படகுகளை நாசப்படுத்துவது, பறிமுதல் செய்து இலங்கை சிறையில் வைப்பது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு கைவிட வேண்டும் என்று இந்திய அரசு, அந்நாட்டு அரசுடன் கண்டிப்புடன் சொல்ல வேண்டும்.”

இவ்வாறு மு.க ஸ்டாலின்அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க