• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆளில்லா வாகன நுட்பத்தை விளக்கும் சாண வண்டு

May 28, 2016 தண்டோரா குழு.

வானத்தில் இருக்கும் சூரியன், சந்திரன், மற்றும் நட்சத்திரங்கள் போன்றவற்றின் நிலைமைகளைச் சார்ந்து தனது நகர்வுகளை தீர்மானிக்கும் சாண வண்டுகள் ஒரு சிக்கலான நகர்வுப்பாதை முறையினை பின்பற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அவை அசுத்தம் நிறைத்த இடங்களில் இருந்தாலும் அதனுடைய பார்வை நட்சத்திரங்களை நோக்கியே உள்ளது. மனிதர்கள், பறவைகள் மற்றும் கடல் நாய் போன்ற நீர் வாழ் விலங்குகள் நட்சதிரங்களை பயன்படுத்தி தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மாரி டாக்கே என்னும் விஞ்ஞானி இந்த சாண வண்டுகளைக் குறித்து ஒரு ஆய்வு கட்டுரையை எழுதினார். அந்த ஆய்வு கட்டுரை தற்போதைய உயிரியல் என்னும் பத்திரிக்கை ஒன்றில் வெளியானது.

பந்து வடிவில் உருட்டி எடுக்கப்பட்ட சாணத்தை உருட்டிச் செல்லும் போது இந்த வண்டுகள் வானத்தை மனதில் படமாக பதித்துக் கொள்கின்றன என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், இந்த வண்டுகள் நேர் கோடுகள் செல்வதை விருப்பும். அவ்வாறு செல்ல இந்த வண்டுகள் சூரிய, சந்திர மற்றும் நட்சத்திர ஒளியை ஒரு சமிக்ஞையாக கொள்கின்றனர். அம்மாவாசை போன்ற இரவுகளில் கூட இந்த வண்டுகள் வழி தவறாமல் நேர் கோடுகளில் செல்வதை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருப்பதாக மாரி டாக்கே கூறினார்.

தனக்கு கிடைக்கும் சாணத்தை ஒரு பாதுகாப்பான இடம் வரை உருட்டி சென்று. பிறகு, நிலத்தடியில் கொண்டு சென்று அந்த சாணத்தை உண்டுவிடும் என்று தெரிவித்தார்.

சாணப்பந்தினை உருட்டிச் செல்லும் போது தாம் ஏற்கனவே பதிவு செய்து கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் மற்றும் பாதையின் வரைபடத்தை தாம் பயணிக்கும் இடத்துடன் ஒப்பிட்டு தமது பாதையை தீர்மானிக்கின்றன.

இந்த சாண வண்டுகளை முழுமையாக புரிந்து கொண்டு அவற்றின் பாதையை அறியும் திறனை தெரிந்து கொள்வது ஓட்டுனர் இல்லாத வாகனங்களை வடிவமைப்பதில் உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க