• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குஜராத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கார் மீது கல்வீசி தாக்குதல்

August 4, 2017 தண்டோரா குழு

குஜராத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கார் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குஜராத்தில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றார். அப்போது, தனீரா பகுதியில், ராகுல்காந்திக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து, ராகுல்காந்தி பன்ஸ்கந்தா பகுதியில் வந்த போது அவரது கார் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் அவரது கார் கண்ணாடி நொறுங்கியது. எனினும் ராகுல்காந்திக்கு எந்த காயமும் ஏற்ப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர் தான் திட்டமிட்டு கல் வீசி தாக்குதல் நடத்தியாக குற்றம் சாற்றினர். மேலும், இது குறித்து முதல்வர் பதில் அளிக்க வேண்டும். இந்த செயலை ஏற்க முடியாது. கல்வீச்சில், ராகுல் பாதுகாவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க