• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து வெளியே குதித்த 17வயது வாலிபன் கைது

August 2, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் விமானம் தரையிறங்கியதும், விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து வெளியே குதித்த 17வயது வாலிபனை விமான காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தின் பனாமா விமான நிலையத்திலிருந்து சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் கோபா ஏர்லைன்ஸ் விமானம் 208 தரையிறங்கியுள்ளது. அந்த விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து 17வயது வாலிபன் ஒருவன் வெளியே குதித்துள்ளான். இதை கண்ட விமான ஊழியர்கள் விமான நிலைய காவல்துறையினருக்கு தகவல் தந்துள்ளனர்.

தகவல் அறிந்த அவர்கள் உடனே அங்கு வந்துள்ளனர். அங்கிருந்து ஓட முயன்ற அந்த வாலிபனை கைது செய்துள்ளனர். அவனிடம் விசாரணை செய்த போது, தான் ஒரு அமெரிக்க குடிமகன் என்றும் தனியே விமானத்தில் பயணம் செய்ததாகவும் தெரிவித்துள்ளான். மேலும் அவன் அதிக மன அழுத்தத்தோடு காணப்பட்டுள்ளான்.

இந்த திடீர் சம்பவத்தால், எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக கீழே இறங்கியுள்ளனர் என்று அந்த விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க