• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

16 வயது ஹரியானா சிறுவனுக்கு கூகுளில் 12 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை

August 1, 2017 தண்டோரா குழு

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 16 வயது வாலிபனுக்கு பிரபல கூகுள் நிறுவனத்தில் மாதம் 12 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

ஹரியானா மாநிலம் குருஷேத்திர மாவட்டம் மணாத்தா என்னும் இடத்தை சேர்ந்த ஹர்ஷிட் ஷர்மா என்னும் 16 வயது வாலிபனுக்கு கூகுள் நிறுவனத்தில் கிராபிக் டிசைனராக பணியில் சேரவுள்ளான். அவனது வருடாந்திர சம்பளம் 1.44 கோடி ரூபாய் ஆகும்.

கூகுள் நிறுவனத்தில் ஓர் ஆண்டு காலம், ஹர்ஷிட் பயிற்சி பெறவேண்டும். இந்த பயிற்சி காலத்திற்கு அவருக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பயிற்சி முடித்த பிறகு, மாத சம்பளமாக அவருக்கு 12 லட்சம் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஹர்ஷிட் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும்போததே, ஆன்லைன் மூலம் வேலைகளை தேடி வந்துள்ளார். அப்படி தேடிக்கொண்டிருக்கும் போது, அந்த வேலைக்காக கடந்த மே மாதம் விண்ணப்பித்துள்ளான். அவருடைய விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட கூகுள் நிறுவனம், அவர் செய்திருந்த கிராபிக்ஸ் டிசைன்களை பார்த்துள்ளது. அதன் பிறகு, ஹர்ஷித்திற்கு ஆன்லைன் மூலம் நேர்க்காணல் நடத்தியுள்ளது. அதன் முடிவில், கிராபிக்ஸ் டிசைனர் பதவியை அவனக்கு ஜூன் மாதம் வழங்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஹர்ஷிட் டிசைன் செய்த கிராபிக்ஸ்காக 7,000 ரூபாய் பரிசையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க