• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளம் வயதில் அமெரிக்காவில் பட்டம் பெற்ற இந்திய வம்சாவளி மாணவர்.

May 27, 2016 தண்டோரா குழு.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்க கல்லூரியில் 12 வயதில் பட்டம் பெற்று இளம் வயதில் பட்டம் பெற்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தானிஷ்க் ஆப்ரஹாம். இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாக்ரோமேண்டோ பகுதியில் வசித்து வருகிறார்.

அப்பகுதியிலுள்ள ரிவர் கல்லூரியில், தனது 12வது வயதில் பட்டம் பெற்ற இவர், அமெரிக்கக் கல்லூரி ஒன்றில் மிக இளம்வயதில் பட்டம் பெற்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா அவரின் இந்த சாதனையைப் பாராட்டியுள்ளார். இது மட்டுமின்றி, தனது 18வது வயதில் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்று தானிஷ்க் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதோடு நில்லாமல், அமெரிக்க அதிபராவதே தனது லட்சியம் என்றும் குறிப்பிட்டுள்ள தானிஷ்க் ஆப்ரஹாம், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் 7 வயதிலேயே தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். இளவயது பட்டதாரியான தானிஷ்க் ஆப்ரஹாமுக்கு, அமெரிக்காவின் முக்கியமான 2 பல்கலைக் கழகங்கள், கல்வி உதவித் தொகையுடன் சேர்க்கைக்கான அனுமதியை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க