• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை

July 31, 2017 தண்டோரா குழு

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க மத்திய தொழிற்பாதுகாப்பு படை அனுமதி அளித்துள்ளது.

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க மத்திய தொழிற்பாதுகாப்பு படை அனுமதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் எடுத்து வந்த தொடர் முயற்சியின் பலனாக, மதுரை மக்களின் நீண்ட நாள் கனவும் மதுரை வர்த்தக தொழில் கூட்டமைப்பின் கோரிக்கையுமான டெல்லி- மதுரை-சிங்கப்பூர் இடையே விமான சேவைக்கான ஒப்புதலை மத்திய தொழில் பாதுகாப்பு படை வழங்கியுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் எனது சார்பாகவும்,மதுரை மக்களின் சார்பாகவும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க