• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடியின் ராமேஸ்வரம் வருகையொட்டி தமிழக மீனவர்கள் விடுதலை என தகவல்

July 25, 2017 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடியின் ராமேஸ்வரம் வருகையொட்டி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ராமேஸ்வரம் வர உள்ளார். இதனிடையே மோடியின் வருகையொட்டி இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்க இலங்கை தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இலங்கை சிறையில் 89மீனவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் புதன்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்கள்.

தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட உள்ளதை அடுத்து அவர்களது வருகையை எதிர்நோக்கி கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மீனவர்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க