• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பிரச்சினையைத் தூண்டிவிட வரவில்லை’ – விஜயகாந்த்

July 22, 2017 தண்டோரா குழு

கதிராமங்கலத்தில் நடைபெறும் மக்கள் போராட்டம் தொடர்பாக பிரச்சினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க நான் வரவில்லை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.எண்ணெய் நிறுவன குழாயில் இருந்து விவசாய நிலங்களில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராகப் போராடி வரும் மக்களைச் சந்தித்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது,

“கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசியை எதிர்த்து போராடிய மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் தமிழக அரசு விடுவிக்க நடவடிக்கை வேண்டும். கதிராமங்கலத்துக்கு ஓஎன்ஜிசியைக் கொண்டு வந்ததில் தி.மு.க மற்றும் அதிமுகவுக்கு பங்கு இருக்கிறது.

கதிராமங்கலத்தில் நடைபெறும் மக்கள் போராட்டம் தொடர்பாக பிரச்சினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க நான் வரவில்லை. மக்களுக்காகப் அவர்களுடன் இணைந்து போராடவே வந்திருக்கிறேன்”.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க